பூமியை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்!

0
5

பூமியின் உட்புறம் அதன் மேற்பரப்பை விட மிக மெதுவாகச் சுழல்கிறது என்பதைக் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மக்கள் பயன்படுத்தும் மணிநேரம், நாட்கள் மற்றும் வாரங்களில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பூமியின் உட்புறத்தின் சுழற்சி மெதுவாகத் தொடங்கியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பூமிக்கு அடியில் 4,800 கிலோமீட்டர் தொலைவில் வெப்பமான மற்றும் அடர்த்தியான இரும்பு-நிக்கல் கோளம் ஒன்று சுழன்று கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலைமையால் உலகளவில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், காலநிலையிலும் சிறிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் ஊகித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here