சுப்பர் 8 சுற்றுக்கு செல்லுமா நெதர்லாந்து!

0
9

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27ஆவது போட்டியில் 25 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள பங்களாதேஷ் தனது சுப்பர் 8 சுற்ற வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது.

சுப்பர் 8 சுற்றுக்குச் செல்ல நேபாளத்துடனான போட்டியில் பங்களாதேஷுக்கு ஒரு புள்ளியே தெவைப்படுகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here