பங்களாதேஷை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

0
11

2024 T20 உலகக்கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் 9ஆவது T20 உலகக் கிண்ணப் போட்டியில் சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை தென் ஆபிரிக்கா அதிகரித்துக்கொண்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களுக்கு 113 ஓட்டங்களைப் பெற்றது. அதன்படி, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here