புதிய மின் கட்டண விபரத்தை வௌியிட்ட அமைச்சர்!

0
10

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி, 0-30 இற்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 இற்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 18 ரூபாவாகவும், 90-180 அலகுக்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாகவும் குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த முன்மொழிவுக்குப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here