நிலவின் இருண்ட பகுதியில் மண்ணை எடுத்த சீனா!

0
6

சீனா கடந்த மே மாதம் 3ஆம் திகதி Change – 6 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த நிலையில் குறித்த விண்கலம் முதன்முதலில் நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மண்ணைப் பிரித்தெடுப்பதில் வெற்றிக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன விண்வெளி ஆய்வு மையம் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளது. குறித்த விண்கலமானது சேகரிக்கப்பட்ட 2 கிலோ மண் மாதிரியை வெற்றிகரமாகக் கொண்டுவரும் பணியைச் செய்து முடித்தால், அவ்வாறு செய்யும் முதல் நாடாகச் சீனா மாறும்.

இந்த மாதிரியை ஆய்வு செய்வதன் மூலம் சந்திரன், பூமி மற்றும் சூரியக் குடும்பத்தின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி தொடர்பான தடயங்களைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here