உலகில் மிக இளம் வயதில் ஓவியரான 1 வயது சிறுவன்!

0
6

கானா நாட்டைச் சேர்ந்த ஏஸ்-லியாம் நானா சாம் அன்க்ரா என்ற சிறுவன் உலகின் இளம் வயது ஓவியராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 1 வருடமும், 152 நாட்களும் ஆன வயதில் அவர் பல ஓவியங்கள் வரைந்துள்ளார். அவற்றில் 9 ஓவியங்கள் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்துச் சிறுவனின் தாயார் சான் டெல்லி கூறுகையில், ஓவியங்கள் வரைவதில் ஏஸ் லியாமுக்கு இருந்த ஆர்வம் அவர் 6 மாத குழந்தையாக இருந்த போதே வெளிப்பட்டது. அவன் நடக்கக் கற்றுக்கொண்டிருக்கும் போது நான் வேலையில் பிசியாக இருந்தேன். எனவே குழந்தையையும் பிசியாக வைத்திருக்கும் விதமாகக் கேன் வாஷ் பேப்பரை தரையில் விரித்து அதில் சிறிது பெயிண்டை ஊற்றினேன். ஏஸ் லியாம் அந்தக் கேன் வாஷ் பேப்பர் முழுவதும் பெயிண்டை பூசியது மூலம் தனது முதல் ஓவியத்தை வரைந்தான். அதன் பிறகு ஓவியம் வரைவது அவனுக்குப் பிடித்த ஒன்றாக மாறியது. தொடர்ந்து பல ஓவியங்கள் வரைந்தான்.

சாமின் தாய் ஒரு ஓவியர் என்பதால், விளையாட்டுப் பொருட்களுக்குப் பதில் பெயிண்ட் மற்றும் பிரஷை விளையாட கொடுத்து அவரின் திறமைக்கு அடித்தளமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here