தேசிய பாதுகாப்பு தினம்” நாளை அனுஷ்டிக்கப்படுகிறது

0
25

சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் “தேசிய பாதுகாப்பு தினம்” நாளை (26) அனுஷ்டிக்கப்படுகிறது.

2004 சுனாமியில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

அதன்படி, 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் தேதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் தேசிய விழாவாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நாளை கொண்டாடப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி, சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய போன் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சுனாமி அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மொபைல் போன்கள் மூலம் தொடர் டோன்கள் மூலம் இந்த விழிப்புணர்வு செய்யப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here