நாடளாவிய ரீதியில் நாளைமுதல் 05 நாட்களுக்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் நளின் ஆரியரத்ன கூறுகையில்,பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.
மேல்இ தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ளனர்.
நாளையும் நாளை மறுதினமும் விஷேட பூச்சியியல் ஆய்வு நடத்தப்படவுள்ளதாக நளின் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.
இந்த வருடத்தில் 82,036 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.