வடக்கு காசாவில் பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 93 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து மாடி குடியிருப்பு குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
உடல்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில், மருத்துவ சேவைகள் ஊழியர்கள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் சிகிச்சை சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.