முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்!

0
6

முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 23 முதல் 25 ரூபா வரை செலவு ஏற்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு குறைவாக உள்ளதன் காரணமாக, சந்தையில் முட்டையொன்றை 35 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களாகக் குறைவடைந்திருந்த முட்டை விலை, தற்போது 40 முதல் 45 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் முட்டை உற்பத்தி போதியளவு காணப்படுகின்ற போதிலும், இடைத்தரகர்கள் முட்டைகளைப் பதுக்கி வைப்பதாலும், உற்பத்திச் செலவு அதிகரிப்பதாலும் அதனைக் குறைந்த விலையில் வழங்க முடியாதுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here