ஜப்பானின் புதிய பிரதமர் தெரிவு!

0
5

ஜப்பானின் புதிய பிரதமராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஷிகெரு இஷிபா அந்நாட்டுப் பாராளுமன்றத்தினால் முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுத்தது. இதையடுத்து, அவா் நாட்டின் அடுத்தப் பிரதமராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று (01) அந்நாட்டுப் பாராளுமன்றினால் அவர் முறைப்படி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here