39 வேட்பு மனுக்கள் தாக்கல்!

0
4

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 39 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையில் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதேவேளை, இன்றைய தினம் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here