திலகரத்ன டில்ஷான் சஜித்துக்கு ஆதரவு!

0
3

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷான் தீர்மானித்துள்ளார்.

இதன்படி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் பேருவளை தொகுதி அமைப்பாளராகத் திலகரட்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here