பெண் உரிமையை அடிப்படை உரிமையாக்குவேன்!

0
4

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் போது அரசியலமைப்பினூடாகப் பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மகளிர் மன்றத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 3ஆவது அத்தியாயத்தில் அடிப்படை உரிமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் இலகுவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.

எனினும் அதில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பாக மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் பாலின அடிப்படையில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் அரசியலமைப்பின் 6ஆவது அத்தியாயத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரும் பாலினம் உள்ளிட்ட காரணங்களால் பிரச்சினைகளை எதிர்நோக்காமல் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அதனடிப்படையில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை அடிப்படை உரிமை மீறலாகக் கருதுவதுடன் அதற்காக அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here