அரச சேவையின் நிர்வாகச் சேவை உத்தியோகத்தர்களுக்கு இதுவரை சேவைக்காலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்குப் பதிலாக 25,000 ரூபாவை சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாது விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை நிர்வாகச் சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.