திருகோணமலையில் நாளை 16 மணி நேர நீர் தடை!

0
3

திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் நாளைய தினம் 16 மணிநேர நீர் விநியோகித் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பகுதியிலும் குச்சவெளி பிரதேச செயலக பகுதியின் இறக்கக் கண்டி பாலம் வரையான பகுதியிலும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

திருகோணமலை – கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here