இன்று காலை டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் விமானம் புறப்பட இருந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது. உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், பொலிஸார், தீயணைப்புத் துறையினர் விமானத்தை விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்குக் கொண்டு சென்றனர். விமானத்தில் இருந்த பயணிகள் அவசர வழியில் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.