முருகேசு சந்திரகுமார் சஜித்துக்கு ஆதரவு!

0
3

முன்னாள் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான முருகேசு சந்திரகுமார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

1994-2000 மற்றும் 2010-2015 காலகட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்ட இவர் நாடாளுமன்ற தெரிவுக் குழுக்களில் பிரதித் தலைவராகவும் பணியாற்றினார்.

அத்துடன் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி சுயேட்சையாகப் போட்டியிட்டார்.

அவர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here