பாடசாலை மாணவிகளுக்காகச் சுகாதார அணியாடைகளை இலவசமாகக் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் இன்று (06) முதல் வழங்கப்படவுள்ளன. கல்வி அமைச்சின் மாணவர் நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த திட்டம் இன்றைய தினம் நாவல பகுதியில் உள்ள மகளிர் பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக ஒரு பில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவி ஒருவருக்கு இரண்டு கட்டங்களில் 1,200 ரூபாய் பெறுமதியான சுகாதார அணியாடைகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.
குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் அதனைப் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.