இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,794 ஆக உயர்ந்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 428 முறைப்பாடுகளும், மாவட்ட முறைப்பாட்டு நிலையங்களுக்கு 1,366 முறைப்பாடுகளும், மேலும் 35 முறைப்பாடுகள் பிற வழிகளில் கிடைத்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 152 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, தேர்தல் சட்ட மீறல்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளதுடன், மொத்தம் 18 வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
மொத்த முறைப்பாடுகளில் 1,483 முறைப்பாடுகள் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், 311 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.