பேருந்து, பாரவூர்தி நேருக்கு நேர் மோதி விபத்து!

0
5

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை – பாமஸ்டன் பகுதியில் இன்று (02) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றும், நுவரெலியா நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒரு ஆணும், 5 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில், லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here