சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நியமங்களுக்கு அமைவாக ஹிங்குரான்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, விமான நிலையம் மற்றும் அது தொடர்பான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்காக இலங்கை விமானப்படை, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் லிமிடெட் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம், ஹிங்குரான்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.