சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தேர்தலில் வெற்றி பெற்ற சாம் கார்லின் “நாடாளுமன்றத்தின் குழந்தை” என்று அழைக்கப்படுவார் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷயர் தொகுதியில் 39 வாக்குகள் அதிகம் பெற்று இவர் வெற்றி பெற்றார்.