பா.ஜ.கவில் இணைந்த ஜடேஜா!

0
4

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி குஜராத் ஜாம்நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், ரவீந்திர ஜடேஜாவின் மனைவியுமான ரிவாபா ஜடேஜா பாஜக உறுப்பினர் அட்டையில் தானும், தனது கணவரும் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தைச் சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 02ஆம் திகதி புது டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை உறுப்பினராகப் புதுப்பித்துச் சேர்த்தார்.

இதனையடுத்து நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமடைந்துள்ளது.

முன்னதாகக் குஜராத் ஜாம்நகர் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிவாபா அந்தக் கட்சியில் சட்டமன்ற உறுப்பினரும் இருந்து வரும் வேளையில் தற்போது ஜடேஜாவும் பாஜக கட்சியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here