கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
நடிகை தமன்னா குறித்துத் தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விஷயம் என்ன உள்ளது என்று கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளனர்.