பிரான்ஸில் நேற்று வெளிப்பட்ட பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் கப்ரியல் அட்டல் இன்று தனது பதவி விலகல் கடிதத்தை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோனிடம் கையளித்துள்ளார். நேற்றைய தேர்தலில் இடதுசாரி அணி ஆச்சரியமான வெற்றியை பெற்ற நிலையில் மக்கரன் தரப்பு அரசாங்கம் முடிவுக்கு வந்துள்ளதை இந்த நகர்வு எடுத்துக்காட்டியுள்ளது.
இந்தத் தேர்தலில் அதிதீவிர வலதுசாரி அணியான மறீன் லுப்பனின் தேசிய பேரணி கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டிருந்த போதிலும் இடதுசாரிகளின் ஒன்றிணைவு, வெற்றியை தடுத்து நிறுத்தியுள்ளது.