நைஜீரியாவில் தொடர் வெடிப்பு -18 பேர் பலி!

0
5

நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 30 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு திருமண விழாக்கள், மரண இறுதிச் சடங்கு நிகழ்வு ஒன்று மற்றும் வைத்தியசாலை என்பனவற்றை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மரணித்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகையினை விட அதிகமாகும் என உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிராந்தியத்தில் கடந்த 15 வருடங்களாகப் போக்கோஹராம் இஸ்லாமிய ஆயுததாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் காலப்பகுதியில் 40,000 பொது மக்கள் மரணித்துள்ளதுடன், 20 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

தற்போது இடம்பெற்ற தாக்குதலையடுத்து ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here