தற்போதைய தவறான பொருளாதாரக் கொள்கையால் அடுத்து யார் ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் குறுகிய காலப்பகுதிக்குள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவை அடுத்தத் தேர்தலின் பின்னர் நாட்டு மக்கள் உணர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் அளவுக்கு நான் பைத்தியக்காரன் அல்ல. ரணிலிடம் இருப்பது லிபரல் கொள்கை. என்னிடம் இருப்பது சுதேச கொள்கை. வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த ஆரம்பித்த பிறகுதான் நாட்டுக்கு என்ன நடந்துள்ளது என்பது தெரியவரும். அடுத்து யார் ஜனாதிபதியானாலும் குறுகிய காலப்பகுதிக்குள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக்கட்சி போட்டியிடும். நீதிமன்ற தீர்ப்புக் கிடைப்பதில் தாமதம் ஏற்படின் மாற்றுச் சின்னத்திலேயே களமிறங்க வேண்டிவரும்.” -என்றார்.