ரம்புக்கனை தொடருந்து நிலையத்துக்கு அருகில் அலுவலகத் தொடருந்து ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பிரதான மற்றும் வடக்கு தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரம்புக்கனை தொடருந்து நிலையத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணிக்கத் தயாராகவிருந்த தொடருந்து ஒன்றிலேயே இன்று காலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகப் பல அலுவலகத் தொடருந்துகள் தாமதமாக இயக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.