இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் வீரர் சூரியகுமார் யாதவ் எடுத்த பிடி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஷோன் பொல்லாக் அதற்குப் பதிலளித்துள்ளார்.
குறித்த பிடியெடுப்பின் போது சூரியகுமார் யாதவின் கால்கள் எல்லைக்கோட்டை உரசவில்லை எனவும் அது மிகவும் புத்திசாலித்தனமான பிடியெடுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.