தமிழ்நாட்டில் ‘கோட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய 80 சதவீத திரையரங்குகள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிறப்பு காட்சி டிக்கெட் ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விநியோகஸ்தர்கள் கேட்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விநியோகஸ்தர்களின் நெருக்கடியால் சிறப்பு காட்சிகளை ரத்து செய்ததாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக காலை 9 மணி சிறப்பு காட்சியை எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.