கனடா அணி 12 ஓட்டங்களால் வெற்றி!

0
9

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 13ஆவது போட்டியில் கனடா அணி 12 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுகமான கனடா ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here