ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்!

0
6

புதிய கல்வி மறுசீரமைப்பின்படி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் புள்ளிகள் வழங்கப்படும் போது பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்படும் புள்ளிகள் மாத்திரமன்றி 30 வீத புள்ளிகள் 04 – -05ஆம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளை அடிப்படையாக வைத்தே வழங்கப்படுமெனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

அதனை முறையாக மதிப்பீடு செய்வது ஆசிரியர்களின் பொறுப்பு என்பதுடன் பாடசாலை சபை மூலம் அவை கண்காணிப்புச் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிலாபம், நாத்தாண்டி, தம்மிஸ்ஸர மகா வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடிக் கட்டடமொன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்பின்போது 01,06,10 ஆகிய வகுப்புகளை உள்ளடக்கி முன்னோடித் திட்டம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here