“அமைதியன் அரசர்”என்ற கௌரவப் பெயர் பெற்ற இயேசு கிறிஸ்துவின் அற்புதமான பிறப்பின் சிறப்புத் தினத்தை நினைவு கூறும் நத்தார் தினம் இன்றாகும்.
தம்முடைய குமாரனை உலகிற்கு அனுப்பியதன் மூலம்,தேவனுடைய ராஜ்யத்தின் மதிப்புகள் பூமியில் மீண்டும் வாழ வேண்டும் என்ற ஆண்டவர் எதிர்பார்த்தார்.இருண்ட இதயங்களுக்கு கிறிஸ்து நித்திய ஒளியைக் கொண்டு வந்தார். பகிர்வு என்ற அற்புதமான பாடத்தை உலகுக்குக் கற்றுத் தந்த அற்புதமான நத்தார் பண்டிகையை,கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி,இன,மத வேறுபாடின்றி உலக மக்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.அன்பும்,ஆதரவும்,அமைதியும்,
சமாதானமும்,சமத்துவமும் நிறைந்த உலகைப் படைக்க இயசு தனது அன்பின் கரங்களை நீட்டி,துயரங்கள் நிறைந்த இதயங்களை அமைதிப்படுத்தினார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக,
உலகலாவிய கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதத்தில் நத்தார் தினத்தை தேவாலய மணிகள் அடித்தும்,இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் மெழுகுவர்த்தி வழிபாடுகளுடனும் கொண்டாடுகிறார்கள்.இயசு கிறிஸ்து கொண்டி வந்த அன்பு,சகோதரத்துவம்,ஏழைகளுக்கு உதவுதல் என்ற செய்தியில் வாழ்ந்தால் மட்டுமே நத்தார் மகிழ்ச்சி தரும்.
சிறிய குடிசைகள் முதல் பெரிய வீடுகள் வரை மக்கள் தங்களால் இயன்ற விதத்தில் நத்தார் பெருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.”நல்லவன் தன் இதயத்தில் பொக்கிஷமாக வைத்த நன்மையை விதைப்பான்,தீயவன் தன் இருதயத்தில் பொக்கிஷமாக வைத்த தீமையை விதைப்பான்” என்று பைபிள் சொல்கிறது.நன்மையும் மனித நேயமும் நிறைந்த ஒரு நாட்டுக்காக உலகிற்காக நம்மை அர்பபணிக்க இயேசு வழி காட்டியுள்ளார் என்பதை இது தெளிவாக்குகிறது.
பல வருடங்களாக இலங்கை கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் மற்றும் நத்தார் பண்டிகைகளை ஒன்றாகக் அனுபவிக்கும் சூழ்நிலையில் உள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத்ததாலும்,குற்றவாளிகள் அடையாளம் காணப்படாததாலும்,
பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.ஈஸ்டர் தாக்குதலில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நத்தார் செய்தி பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அமைதி உண்டாவதக என்பதாகும்.விடுதலைச் செய்தியை உலகிற்கு எடுத்துரைத்து,நத்தாரின் உண்மையான அர்த்தத்தை எடுத்துக் காட்டும் மகிழ்ச்சியும்,அமைதியும் நிறைந்த நத்தார் பெருவிழாவாக அமைய நல்வாழ்த்துக்கள்!