எம்பொக்ஸ் நோய்த் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலகச் சுகாதார ஸ்தாபனம், விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. எம்பொக்ஸ் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலகச் சுகாதார ஸ்தாபனம் அதனை உலகப் பொதுச் சுகாதார அவசரகால நிலையாகப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இவ் அறிவுறுத்தலையும் விடுத்துள்ளது.
எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலானது ஆபிரிக்கக் கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது, குறித்த நாடுகளிலிருந்து 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குறித்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 517 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.