தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா ‘VD12’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகளுக்காக இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடாக இலங்கையை வந்தடைந்தார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்குத் தற்காலிகமாக ‘VD12 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளனது. கௌதம் தின்னனுரியின் இயக்கத்தில் உருவாக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் பல்வேறு நகரங்களில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இதன்போது சில அதிரடி காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 20 முதல் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இலங்கையில் நடைபெற போகும் இந்தப் படப்பிடிப்புகளுக்கான Line Production Iyngaran Media Solution – Pvt வழங்கவுள்ளனர். இந்த நிறுவனம் இடத்திற்கு முன்னாள் இளைய தளபதியின் GOAT திரைப்படம் உள்ளிட்ட பல தென்னிந்திய திரைப்படங்களுக்கும் இவர்கள் Line Production வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து விஜய் தேவர்கொண்டாவின் ‘VD12’ படத்திற்றுக்கும் வெற்றிகரமாக Line Productionனை வழங்கி கொண்டு உள்ளனர்.