மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சம்பவத்தில் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது குறித்த பகுதியில் வீசிய பலத்த காற்றுக் காரணமாக மேடையின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.