அரசுடமையாகப்போகும் கட்டுப்பணம்!

0
3

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். வேட்பாளர்களுக்காகக் கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

மேலும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இந்தத் தேர்தலில் செலவு செய்யும் பணமும் அதிகரிக்கும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

1994ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பில் இரண்டு பிரதான வேட்பாளர்களைத் தவிர வேறு ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகள் 4.08 சதவீதமாகும்.

2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் நந்தன குணதிலக்க பெற்ற வாக்கு வீதமே இதுவாகும்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இரண்டு பிரதான வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 33 வேட்பாளர்களும் 2.5% வாக்குகளை மட்டுமே பெற்றனர்.

இதன்படி 2% வாக்குகளைக் கூடப் பெற முடியாத ஏனைய அனைத்து வேட்பாளர்களின் கட்டுப்பணமும் அரசுடமையாக்கப்படும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here