பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று (06) மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 150 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் லீக்ஸ் 250 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இன்று ஒரு கிலோகிராம் கெரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.