இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி!

0
4

T20 உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிப் பெற்றது. அந்தப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 11 ஓவர்களில் 5 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் 10 ஓட்டங்களை எடுத்தார்.

பந்துவீச்சில் மார்கோ ஜான்சன் மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

57 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை துரத்திய தென்னாபிரிக்க அணியினர் 8 ஓவர்கள் மற்றும் 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை பதிவு செய்தனர்.

இதன்படி தென்னாபிரிக்க அணி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here