The GOAT படத்தின் 2வது பாடல் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. பெங்களூருவில் இந்த பாடலுக்காக நானும் வெங்கட் பிரபுவும் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இந்த பாடலை எனது அக்கா பவதாரிணி மருத்துவமனையில் இருந்து நலமுடன் வந்ததும் அவரின் குரலில் உருவாக்கலாம் என நினைத்தேன். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் இறந்த செய்தி எங்களை வந்தடைந்தது.
அவரது குரலை இப்படி பயன்படுத்துவேன் என நான் நினைத்து பார்க்கவே இல்லை. இதனை உருவாக்க என்னுடன் பணியாற்றிய குழுவுக்கு நன்றி. It is a very bittersweet moment for me என தெரிவித்துள்ளார்.