சிறிய மழை பெய்தாலும் மண்சரிவு அபாயம்!

0
8

சில பிரதேசங்களில் 350 மில்லி மீற்றருக்கும் அதிகளவான அடை மழை பெய்துள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் சிறிய மழை பெய்தாலும் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் வசந்த சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார். “கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 350 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பதிவாகியுள்ளது. மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறிதளவு மழை பெய்தாலும் மண்மேடு சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படலாம்.”

எனவே பொது மக்கள் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படவும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here