இந்தியாவின் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தமிழக அரசு நேற்று தடை விதித்தது. சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதில் புற்றுநோயை ஏற்படுத்தும் “ரோடமைன் பி” இரசாயனம் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாகப் புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களிலும் “ரோடமைன் பி” இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பஞ்சு மிட்டாய்க்குத் தடை விதிக்கப்பட்டுவரும் நிலையில், கும்பகோணம் பகுதியில் நிறமேற்றப்படாத வெள்ளை நிற பஞ்சுமிட்டாய்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.