பாடசாலைகளிலும் தனியார் வகுப்புகளிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது போதைப் பொருட்கள் தொடர்பில் ஆதாரப்பூர்வமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்
நாட்டில் பல்வேறு பகுதிகளில் தற்போது போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இருந்தபோதிலும் சமீப காலமாக ஒரு சில பாடசாலைகள் தனியார் வகுப்புகளில் இருந்து சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருட்கள் தொடர்பில் முறைப்பாடுகள் வந்த வண்ணம் உள்ளன.
இதனை நான் வன்மையாக கண்டிப்பதோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தகுதி தராதரம் பார்க்காமல் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்ற ரீதியில் அவர்களுக்குரிய பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மாகாண ஆளுநர்களுக்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கும் மத்திய அரசாங்கத்தின் கல்வி செயலாளருக்கும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு மேற்படி விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் அறிக்கையையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்புமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.