இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக சுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (நவம்பர் 4) கட்டுநாயக்கில் உள்ள தலைமையகத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
37 ஆண்டுகள் இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றிய சுனில், மேலதிக பணிப்பாளர் நாயகனாகவும், செய்தித் தொடர்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் அவுஸ்திரேலிய கென்பெரா பல்கலைக்கழகங்களில் சுங்க சட்டம் மற்றும் முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.