நரகாசூரன் வதத்தை நினைவுகூறும் தீபாவளி பண்டிகை!

0
2

தீபாவளிப் பண்டிகை தீமையின் வடிவமான அசுரர்களைக் கடவுளின் அவதாரம் அழித்ததால் உருவானது என்கின்றன இந்து புராணங்கள்.

திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றபோது அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசூரன் ஆகின்றான். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் நரகாசூரன் துர்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் அவனை மாவிஷ்ணு அழிக்க நினைத்தார்.

எனினும் அவன் தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். நரகாசூரன் உடன் மாவிஷ்ணு போரிட்ட போது அவன் மாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு மயக்கம் அடைவது போல் மாவிஷ்ணு பூமியில் விழுந்தார். இதைக் கவனித்த சத்தியபாமா கோபமடைந்து நரகாசூரனை போருக்கு அழைத்தார்.

சத்தியபாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசூரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்குச் சத்தியபாமா தனது தாய் என்று தெரியவந்தது.

அவரிடம் அம்மா, நான் மறைந்த இன்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும் எனக் கோரினான். அவ்வாறு நரகாசூரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாளே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்தியா, நேபாளம், இலங்கை, மியன்மார், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இந்தப் பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடுகின்றனர்.

இவ்வாறு இன்றைய தினம் அனைத்து இந்துக்கள் மத்தியிலும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here