O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு!

0
4

இரண்டு வாரங்களுக்குள் சாதாரணத் தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (14) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள், கால அட்டவணைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் என்பனவற்றைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்த முடியும் என்றார்.

மேலும் கருத்துத் தெரிவித்த திரு.சுசில் பிரேமஜயந்த,

“எதிர்வரும் வருடத்திற்கான பாடசாலை தவணை ஜனவரி 02ம் திகதி ஆரம்பமாகிறது. ஆனால் மூன்றாவது தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இரண்டு வாரங்கள் பாடசாலைகளை நடத்த வேண்டியுள்ளது.
அதன்படி, 2025 ஜனவரி 20 ஆம் திகதி முதலாவது பாடசாலை தவணையின் முதல் நாள் ஆரம்பமாகிறது. அதற்குள் சீருடைகள், பாடப்புத்தகங்கள் எல்லாம் தயாராக இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டிருந்தன. இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.

மேலும், சாதாரணத் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும்.
மாதக்கணக்கில், வருடங்களில் பிற்போடப்பட்ட உயர்தரப் பரீட்சை இந்த வருடத்திலேயே நவம்பர் 25-ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2025 ஆம் வருடத்தின் பரீட்சைகள், கால அட்டவணைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் ஆகியவை தாமதமின்றி ஒன்றாகச் செயல்படுத்தப்படும்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here