வேட்டையன் ரிலீஸ் திகதி ?

0
4

‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் , துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வேட்டையன் திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் ஒக்.10-ஆம் திகதி ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here