எம்பொக்ஸின் தாக்கம் அதிகரிப்பு!

0
3

ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அறிவித்துப் புதிய பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தினால் இந்தப் பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எம்பொக்ஸ் வைரஸ் திரிபின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேநேரம் ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய கண்டங்களிலும் இந்த நோய் தாக்கம் பரவும் அச்சம் உள்ளதாகவும் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதற்காக இரண்டு தடுப்பூசிகளைச் செலுத்துவதை விடவும் ஒரு டொப்-அப் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது போதுமானது எனவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

எம்பொக்ஸ் நோய் பரவலை உலகப் பொதுச் சுகாதார அவசர நிலையாக உலகச் சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here