அயர்லாந்தை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி!

0
3

இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

Dublin இல் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Gaby Lewis அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Inoshi Priyadharshani 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 146 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Harshitha Samarawickrama ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி 2 போட்டிகள் கொண்ட இந்த ரி20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி ஒன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here